Pages

Thursday, May 16, 2013

Vijay Awards 2013 - Winners List

Vijay Awards 2013 was held as a grand function in Chennai. Vijay Awards 2013 winners were awarded at the function. Here is the complete list Vijay Awards 2013

VIJAY AWARDS 2013 WINNERS LIST :
****************************************
Best Actor – Dhanush (3)

Best Actress - Samantha Ruth Prabhu (Neethane En Ponvasantham)


Best Director - Balaji Shaktivel (Vazhakku En 18/9)

Best Screenplay/Writer– Karthik Subbaraj (Pizza)


Best Dialogue Writer - Rajesh (Oru Kal Oru Kannadi)

Best Film of the Year 2012 - Vazhukku En 18/9

Best Supporting Actor Male – Sathyaraj (Nanban)

Best Supporting Actor Female – Anupama (Muppozhuthum Un Karpanaigal)

Best Comedian – Santhanam (Oru Kal Oru Kannadi)

Best Villan – Sudeep (Naan Ee)

Best Music Director - D.Imman (Kumki)

Best Debut Actor – Vikram Prabhu (Kumki)

Best Debut Actress – Varalakshmi Sarath Kumar (Poda Podi)

Best Debut Director - Balaji Tharaneetharan (Naaduvula Konjam Pakkatha Kanom)

Best Find of the Year – Anirudh Ravichandar (3)


Best Face of the Year  - Udhaynidhi Stalin (Oru Kal Oru Kannadi)

Best Cinematographer – Gopi Amarnath (Pizza)

Best Editor - Kotagiri Venkateswara Rao (Naan Ee)

Best Costume Designer – Rajendran (Aaravan)

Best Art Director - R.K.Vijay Murugan (Aaravan)

Best Stunt Master – Anal Arasu (Thadaiyarai Thakka)

Best Choreographer – Robert ((Love Panalama from Podaa Podi)

Best Lyricist – Thamarai ("Kangal Neeye" in -Muppozhuthum Un Karpanaigal)

Best BGM - Yuvan Shankar Raja

Best Female Playback - Ramya (Neethane En Ponvasantham)


Best Playback Singer Male - Mohit Chauhan (Po nee po – 3)

Best Crew – Pizza

Best Short Film of the Year 2012 - Warrant

Best Entertainer of the Year 2012 - Ilayathalapathy Vijay (Nanban & Thuppakki)

SPECIAL AWARDS :
*********************
Chevalier Sivaji Ganesan Award 2012 : Shahrukh Khan

Special Jury Award for Best Actor 2012 : Vijay Sethupathy

Special Jury Award for Best Actress 2012 : Trisha

Special Jury Award for Best Film 2012 : Aarohanam

FAVORITE CATEGORY :
*************************
Favorite Hero of the Year 2012 : Vijay(Thuppakki)

Favorite Heroine of the Year 2012 : Kajal Agarwal (Thuppakki)

Favorite Director of the Year 2012 : A.R Murugadoss (Thuppakki)

Favorite Film of the Year 2012 : Thuppakki

Favorite Song of the Year 2012 : Google Google (Thuppakki)

Favorite Album of the Year 2012 : Nanban

Wednesday, May 8, 2013

Ways of Retrieving data in Virus affected Pendrive (தமிழில் படிக்க)

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!



தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை.

வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.

காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம்.ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம். 
 
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்..

Emergency Helpline Services in India


The below services are the important emergency helpline services of our country.

Friday, May 3, 2013

தகவல் அறியும் உரிமை (Right To Information/ R 2 I / R to I)

தகவல் அறியும் உரிமை (Right To Information/ R 2 I / R to I)





தகவல் அறியும் உரிமை (Right To Information/ R 2 I / R to I) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?

******************************************************
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
******************************************************
                     "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்தது"..............என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.

அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

என்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்?
*******************************************************************************
- ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும்  அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

- அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்.

- அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்.

- அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்.

- எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.

யார் இந்த தகவல்களைத் தருவது?
*********************************************************
அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது.பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி (Public Information Officers) என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம்.

ஆர்.டி.ஐ. விண்ணப்பிப்பது எப்படி?
*******************************************************
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை.

ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும்,இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது.

இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான இணையதளங்கள்:
*************************************************

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க:
******************************************************************

3. http://www.rtination.com/ --  என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

- ஓட்டுநர் உரிமம்,

- சாலை மேம்பாடு,
- அடிப்படை கட்டமைப்பு,
- பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும்,
-ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.