Pages

Saturday, January 3, 2015

Best Tamil Movies 2014

The following list of movies are the best Tamil movies of 2014. The given list has no order. Only based on the date of its release it is ordered.
1. Veeram - Super Hit
(Released on 10th Jan worldwide) 

2. Jilla – Super Hit

(Released on 10th  July worldwide)


3. Goli Soda – Super Hit
(Released on 24th Jan)


4. Pannaiyarum padminiyum – Hit
(Released on 07th Feb)


5.Thegidi – Hit

(Released on 28th  Feb)

6.Cuckoo – Hit

(Released on 21st  Mar)
 

7. Maan Karate – Super Hit

(Released on 04th  Apr)

8.Yaamirukka Bayamey – Super Hit

(Released on 09th  May)

9. Mundasupatti – Super Hit

(Released on 13th  June)

10. Arima Nambi – Hit

(Released on 04th  July)


11. Velaiyilla  Pattathari – Blockbuster

(Released on 18th  July worldwide)


12. SATHURANGA VETTAI – Super Hit
(Released on 18th  July)


13. Jigarthanda – Hit
(Released on 01st  Aug)


14. Salim – Hit

(Released on 29th  Aug)

15. Aranmanai – Hit

(Released on 19th  Sep)
16. Madras – Super Hit

(Released on 26th  Sep)

17. KATHTHI – Blockbuster
(Released on 22nd  Oct worldwide)      

18. Naaigal Jaakirathai - Hit
(Released on 21st  Nov)

19. LINGAA – Blockbuster
(Released on 12th  Dec worldwide)


20. Pisaasu – Hit

(Released on 19th  Dec)

Top 10 Commercially Successful Movies 2014

The following list of movies are the commercially successful Tamil movies of 2014.These movies has huge collections at the box office and considered as big hit.The given list has no order. Only based on the date of its release it is ordered.
1. VEERAM - Super Hit
(Released on 10th Jan worldwide) 


2. JILLA – Super Hit
(Released on 10th Jan worldwide)


3. GOLI SODA – Super Hit
(Released on 24th Jan)


4. MAAN KARATE – Super Hit
(Released on 04th Apr worldwide)


5. VELAIYILLA PATTATHARI – Blockbuster
(Released on 18th  July worldwide)


6. SATHURANGA VETTAI – Super Hit
(Released on 18th  July)


7.MADRAS – Super Hit
(Released on 26th  Sep)

8. KATHTHI – Blockbuster
(Released on 22nd  Oct worldwide)      
9. POOJAI - Super Hit
(Released on 22nd  Oct)

10. LINGAA – Blockbuster
(Released on 12th  Dec worldwide)

Wednesday, December 24, 2014

இந்தியா எப்படி இணையத்துடன் இணைகிறது?


இந்தியாவில் பன்னாட்டளவிலான தகவல் அலைவரிசைக் கற்றையினைப் பயன்படுத்துவதில், நான்கு பெரிய நிறுவனங்கள் இயங்குகின்றன. அவை: வி.எஸ்.என்.எல். (விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்ற பொதுத் துறை நிறுவனமாக இயங்கி, பின்னர் டாட்டா குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிறுவனமாகும்.), பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் பி.எஸ்.என்.எல்.


இந்த நிறுவனங்களில், மிகப் பெரிய அளவில் செயல்படுவது டாட்டா குழும நிறுவனமாகும். மிகச் சிறிய அளவில் இயங்குவது பி.எஸ்.என்.எல். நிறுவனம். ரிலையன்ஸ் இந்தப் பிரிவில் வேகமாகத் தற்போது வளர்ந்து வருகிறது. 

இந்தியா இணையத்துடன் நான்கு நகரங்களில் இணைகிறது. அவை: சென்னை, மும்பை, கொச்சின் மற்றும் தூத்துக்குடி. இவை அனைத்தும் துறைமுக நகரங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நகரங்கள் அனைத்திலும் தரைவழித் தொடர்பு நிலையங்களாக இயங்குகின்றன. இவை தரைவழியில் பதிக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு கேபிள்களை, கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள சப்மரைன் கேபிள்களுடன் இணைக்கின்றன. 

அலைக்கற்றை வரிசை என எடுத்துக் கொண்டால், டாட்டா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் கோலோச்சுகின்றன. அதனால் தான், எம்.டி.என்.எல். நிறுவனம், அண்மையில், டாட்டா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து, அலைக்கற்றை பயன்பாட்டினை விலை கொடுத்து வாங்கியது. எப்படி, பி.எஸ்.என்.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும்போது, தனியார் நிறுவனங்கள் வசம் இந்த தொடர்பு வர்த்தகம் சென்றது என நாம் நினைக்கலாம். அரசு, 'இந்த கடலுக்கடியில் கேபிள் போடுவது, இணைப்பு தருவது போன்ற விஷயங்கள் அதிக லாபம் தரும் வர்த்தகம் இல்லை' என்று ஒதுங்கிக் கொண்டதே காரணம். இது உண்மையா என்று நாம் கேள்விக் கணை தொடுத்தாலும், பி.எஸ்.என்.எல்.மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவை, தங்கள் அலைக்கற்றை அலை வரிசைக்கும், இணைய இணைப்பிற்கும், ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனத்தினையே நம்பி உள்ளன என்பதே உண்மை. ஆனால், இப்போது, பி.எஸ்.என்.எல். தனக்கென ஒரு தரை வழித் தொடர்பு நிலையத்தை அமைத்து இயக்க வேண்டும் என எண்ணித் திட்டமிட்டு, மேற்கு வங்காளத்தில், இதற்கான நிலையம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது




இனி, இந்தியாவை உலகத்தின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் 8 சப் மெரைன் கேபிள் கட்டமைப்பு குறித்து இங்கு பார்க்கலாம்.

1. SMW3w:


இதன் விரிவாக்கம் South East Asia - Middle East - Western Europe என்பதாகும். இந்த கேபிள், இந்தியாவை, மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைக்கிறது. உலகைத் தழுவியபடி கடலில் புதைக்கப்பட்டிருக்கும் இந்த கேபிளுக்கு 39 இடங்களில் தொடர்பு நிலைய இணைப்புகள் உள்ளன. இந்த கேபிள், இந்தியாவைப் பொறுத்தவரை, மும்பை நகரத்தில் இயங்கும் தரை வழி நிலையம் வழியாக முதலில் இணைக்கப்பட்டுள்ளது. பிற ஆசிய நாடுகளை, கொச்சின் நகரில் இயங்கும் தரை வழி நிலையம் வழியாக இணைக்கிறது. மும்பையில் உள்ள தரைவழி இணைப்பு மையம் முன்பு வி.எஸ்.என்.எல். என்று அழைக்கப்பட்ட, தற்போது டாட்டா குழுவிற்குச் சொந்தமான நிறுவனப் பிரிவிற்குச் சொந்தமானதாகும். 


2. SMW4:


இதன் விரிவாக்கம் South East Asia -- -- Middle East - Western Europe என்பதாகும். இந்த கேபிள் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் இணைக்கப்படுகின்றன. இந்த கேபிள் 17 தரைவழி இணைப்பு இடங்களைத் தொடுகிறது. இந்தியாவில் மும்பை மற்றும் சென்னையில் உள்ள நிலையங்களில் இணைந்து கொள்கிறது. மும்பையில் உள்ள நிலையம் டாட்டாவிற்குச் சொந்தமானது. சென்னை நிலையம் பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்குச் சொந்தமானது.


3. SAFE :


இதன் விரிவாக்கம் South Africa Far East Cable. தென் ஆப்பிரிக்காவில் உள்ள மெல்க்பாஸ்ட்ராண்ட் (Melkbossstrand) என்னும் இடத்திலிருந்து வருகிறது. டர்பன், மொரிசியஸ் ஆகிய இடங்களைத் தொடுகிறது. அதன் பின் இந்தியாவில் கொச்சின் நகரில் உள்ள தரைவழி நிலையத்தினைத் தொடுகிறது. கொச்சின் நகரில் உள்ள இந்த நிலையம் டாட்டாவிற்குச் சொந்தமானது.


4. FLAG :


இதன் விரிவாக்கம் Fiber Optic Link Around the Globe என்பதாகும். இந்த கேபிள் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்று, மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கிறது. இந்தியாவில் இது மும்பை நிலையத்துடன் இணைகிறது. இந்த கேபிள் நெட்வொர்க்கினை FLAG Telecom நிறுவனம், சொந்தமாக வைத்திருந்தது. இந்நிறுவனத்தை டாட்டா நிறுவனம் விலைக்கு வாங்கியது. மும்பையில் இந்தியாவை இணைத்த பின்னர், இந்த கேபிள் தென் கிழக்கு ஆசிய நாடுகளைத் தொடச் செல்கிறது. 


5. i2i :

இதன் விரிவாக்கம் Airtel SIngtel ஆகும். இது சிங்கப்பூரிலிருந்து சென்னை வரை 3,100 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் சிங்கப்பூர் நிறுவனம் கூட்டாக இதனை அமைத்துள்ளன. இந்தியாவிற்கான இதன் தரை வழி நிலையத் தொடர்பு, சென்னையில் உள்ளது. சிங்கப்பூரில் இருந்து இந்த கேபிள் SEA-ME-WE 3 மற்றும் APCN 2 என்ற சப் மரைன் கேபிள்களுடன் இணைக்கப்படுகிறது.

6. TIC:


மேலே ஐந்தில் கூறப்பட்ட i2i கேபிள் செல்லும் வழியிலேயே இதுவும் செல்கிறது. இது வி.எஸ்.என்.எல் (டாட்டா) நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதற்கான தரைவழி இணைப்பு நிலையம் சென்னையில் இயங்குகிறது. சிங்கப்பூரில், இது சாங்கி நகரில் தரை வழி இணைப்பிற்கென இணைக்கப்பட்டுள்ளது. இந்த கேபிளின் மொத்த நீளம் 3,175 கி.மீ.

7. Falcon:

ஐரோப்பா, மத்தியகிழக்கு மற்றும் இந்தியாவை இது இணைக்கிறது. இந்தியாவில், மும்பை நகரில் உள்ள தரை வழி இணைப்பு மையத்தில் இணைகிறது. கேபிள் மற்றும் தரைவழி இணைப்பு மையம் ஆகியவை ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.


8. Indo-Sri Lanka Cable:


இதற்கான தரைவழி இணைப்பு நிலையங்கள் தூத்துக்குடியிலும், இலங்கையில் கொழும்புவிலும் உள்ளன. இது பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்குச் சொந்தமானது. 

மேலே சொல்லப்பட்ட 8 கடல் வழி கேபிள்களுடன், பாரதி ஏர்டெல் நிறுவனம், மேலும் 15 தகவல் தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து, உலகைச் சுற்றி Europe India Gateway என்ற ஒரு சப் மரைன் கேபிளை அமைத்து வருகிறது. இந்த கேபிள், இந்தியாவை பிரிட்டனுடன் இணைக்கும். இந்த கேபிள் அமைக்க 70 கோடி டாலர் செலவாகும் எனத் திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த கேபிள் அமைக்கப்படும் தூரம் 15,000 கி.மீ. ஆகும்.

இந்த கேபிள்களின் வழியாகத்தான், இணையப் போக்குவரத்து நடைபெறுகிறது. இவை, இதில் நல்ல அனுபவம் பெற்ற பொறியாளர்களால் பராமரிக்கப்படுகின்றன. இருப்பினும், எதிர்பாராத நேரங்களில், பழுது ஏற்பட்டு, இந்த கேபிள்கள் வழியே செல்லும் டேட்டா பாதிக்கப்படுகிறது. இவற்றில் ஒன்றில், முழுமையாகப் பழுதானாலும், மற்ற கேபிள்கள் வழி, அந்த டேட்டா போக்குவரத்து மாற்றிவிடப்பட்டு, நமக்கு இணைய இணைப்பு கிடைக்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ளன. எனவே, நாம் மொபைல் போனில் இணைய இணைப்பு பெற்றாலும், டேட்டா ட்ரைவ் வழியாகப் பெற்றாலும், இந்த கேபிள்களே அடிப்படையில் நமக்கு உதவுகின்றன.

Monday, October 27, 2014

ANDROID VERSION 5 LOLLIPOP(ஆண்ட்ராய்டு 5 லாலிபாப்!)

ஆண்ட்ராய்டு 5 லாலிபாப்!(ANDROID VERSION 5 LOLLIPOP)


கூகுள், நெக்சஸ் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட்டுடன் ஆண்ட்ராய்டின் அடுத்த வர்ஷனான ஆண்ட்ராய்டு லாலிபாப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய இயங்கு தளம் (ஒ.எஸ்) எல்லா வகையான சாதனங்களிலும் சீரான அனுபவத்தைத் தரவல்லது என கூகுள் சொல்கிறது.
இதில் நோட்டிஃபிகேஷன் பெறுவதைக் கட்டுப்படுத்தும் வசதி இருக்கிறது. போனைப் பயன்படுத்தும்போது கால் வந்தால் இடையூறாகத் தோன்றாது. நோட்டிஃபிகேஷன் யாரிடம் இருந்து வருகின்றன என்பதைப் பொறுத்துப் புத்திசாலித்தனமாக ரேங்க் செய்யப்படும்.

பேட்டரி சேமிப்பு வசதி கூடுதலாக 90 நிமிட நேரத்தை அளிக்கக் கூடியது. பாதுகாப்புக்காக என்க்ரிப்ஷன் வசதி இருக்கிறது. மேலும் ஒரே போனைப் பலர் பயன்படுத்தலாம். இதில் உள்ள கெஸ்ட் யூசர் வசதியைக் கொண்டு மற்றவர்களுக்கு போனைப் பயன்படுத்த கொடுக்கலாம். அவர்கள் போனை மட்டுமே பயன்படுத்த முடியும், அதில் உள்ள தகவல்களை அல்ல; டெஸ்க்டாப்பிற்கு நிகரான செயல்பாட்டைத் தரக்கூடியது. தமிழ் உள்ளிட்ட 68 மொழிகளில் பயன்படுத்தலாம். இவை எல்லாம் ஆண்ட்ராய்டு லாலிப்பாபின் சிறப்பம்சமாகச் சொல்லப்படுகின்றன.


எல்லாம் சரி, அதென்ன லாலிபாப் என்று பெயர்? ஆண்ட்ராய்டு 1.5 முதல் தொடங்கி எல்லா வர்ஷன்களுக்கும் கப்பேக், டோனெட், சாண்ட்விச், ஜெல்லிபீன், கிட்காட் என எல்லாமே இளைஞர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்களின் பெயர்தான். அந்த வரிசையில் இப்போது லாலிபாப்.
அது மட்டுமல்ல, ஆண்ட்ராய்டின் ஒவ்வொரு வர்ஷனுக்கும் கூகுளின் தலைமை அலுவலகத்தின் முன் அந்த வர்ஷன் அடையாளத்துடன் ஆண்ட்ராய்டு சிலை நிறுவப்படுவதும் வழக்கம். லாலிபாப் சிலையும் இப்போது அங்கே அலங்கரிக்கிறது

Monday, September 1, 2014

Cloud Computing explaination in Tamil




தகவல் தொழில் நுட்ப உலகில் இப்போது நாம் அடிக்கடி கேட்கும் பெயர் க்ளவ்ட் (Cloud) கம்ப்யூட்டிங். அடிக்கடி பயன்படுத்தப்படுவதனாலேயே, இது குறிக்கும் பொருளும் பலவாறாக எண்ணப்படுகிறது. சரியாக இதன் பொருள் தான் என்ன? இதனைத் தெரிந்து கொள்வதனால் என்ன பயன்? அல்லது தெரிந்து கொள்ளாததனால் எதனை இழக்கிறோம்? இதனோடு தொடர்புடையதாக hybrid cloud மற்றும் SaaS என்றெல்லாம் சொல்லப்படுகிறதே? அவை எவற்றைக் குறிக்கின்றன? இதற்கான சில விளக்கங்களையும் குறிப்புகளையும் இங்கு காணலாம்.


க்ளவ்ட் அறிமுகம்:



 Cloud computing என்பது இந்த 21 ஆம் நூற்றாண்டின் பிரபலமான தகவல் தொழில் நுட்ப சொற்றொடராக இருந்தாலும், 1950 ஆம் ஆண்டிலேயே, இதன் வேர்கள் தென்பட்டன. மெயின் பிரேம் கம்ப்யூட்டர்களும், அதனுடன் இணைக்கப்பட்ட டெர்மினல்களையும் சற்று எண்ணிப்பார்த்தால், அன்றே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் தொடங்கிவிட்டதனை அறியலாம். மெயின்பிரேம் சர்வருக்கும், அதன் டெர்மினல்களுக்குமான இன்றைய தொலைவு தான் மிக அதிகமாகி உள்ளது. 

க்ளவ்ட் என்பது பல்வேறு கம்ப்யூட்டர்கள், மொத்தமாக இணைக்கப்பட்டு ஒரே ஒரு சிஸ்டத்தால் இயக்கப்படுவதாகும். க்ளவ்ட் என்பது எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளை (data storage, content delivery, or applications) வழங்கும் சாதனமாகும். இவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கம்ப்யூட்டிங் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதாவது, பயனாளர்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்துகையில், எந்தவிதமான செட் அப் பணிகளையோ அல்லது க்ளவ்ட் சாதனத்தினை பராமரிக்கும் பணியினையோ மேற்கொள்ள வேண்டியதில்லை. 

சரி, க்ளவ்ட் என்று ஏன் இதற்குப் பெயரிட்டனர்? யாருக்கும் இதன் காரணம் உறுதியாகத் தெரியவில்லை. பல கம்ப்யூட்டர்கள் இணைப்பினை தூரத்திலிருந்து பார்க்கும் போது, அவை அனைத்தும் சேர்ந்து ஒரு மேகக் கூட்டமாகத் தானே தெரியும். கூட்டமாகப் பறக்கும் வெட்டுக் கிளிகள் அல்லது வெளவால்களை எண்ணிப் பார்த்தால், இது புரியும். அதே கற்பனையைக் கம்ப்யூட்டர்களுக்கும் செலுத்திப் பார்த்தால், நாம் ஏன் இதனை க்ளவ்ட் என அழைக்கிறோம் என்பதுவும் புரியும். க்ளவ்ட் சாதனங்களின் அமைப்பினை இரு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். 


1. ஆயத்தப்படுத்தல் (Deployment) 2. சேவை தருதல் (Service). 



முதல் வகையில் இயங்கும் க்ளவ்ட் அமைப்பினை இன்னும் சில பிரிவுகளில் வகைப்படுத்தலாம். அவை, 1. தன் பணிக்கான க்ளவ்ட் (Private cloud) இது ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு மட்டும் பயன்படும் வகையில் அமைக்கப்படுவதாகும். இதனை இவர்கள் இருக்கும் இடத்தில் தான் அமைக்கப்பட வேண்டும் என்பதில்லை. தூர இடங்களிலும் வைத்து இயக்கலாம். இந்த க்ளவ்ட் சேவையை, பயன்படுத்துபவர் அல்லது நிறுவனமே இயக்கலாம்; அல்லது இவர் சாராத ஒருவர் அல்லது நிறுவனம், இவர்களுக்காக அமைத்து இயக்கலாம். 

1. பொதுவான க்ளவ்ட்: பொது க்ளவ்ட் சேவை பொதுவான எவரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுகின்றன. முதலில் சொல்லப்பட்ட தனி நபர் க்ளவ்ட் அமைப்பிற்கும், இதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. பயனாளர்கள் யார் என்பதில் மட்டுமே வேறுபாடு உண்டு.


2. கலப்பான க்ளவ்ட் இயக்கம் (Hybrid Cloud): ஒரு க்ளவ்ட் தனிநபர் மற்றும் பொதுவான எவருக்கும் என இரண்டு வகையினருக்கும் தன் சேவையினை வழங்குகையில் அது Hybrid Cloud என அழைக்கப்படுகிறது. இரண்டு க்ளவ்ட் சர்வர்கள் இணைந்து சேவைகளை, இரண்டு வகையினருக்கும் வழங்க முன்வரும்போதும், இதே பெயரில் அது அழைக்கப்படுகிறது. ஒருவர் தனக்கென ஒரு க்ளவ்ட் சர்வரை அமைத்துப் பயன்படுத்திக் கொண்டு, மற்றவர்களையும் பயன்படுத்த அனுமதித்தால், அது Hybrid Cloud என அழைக்கப்படும். 


3. சமுதாய க்ளவ்ட் (Community Cloud): தனிப்பட்ட க்ளவ்ட் சர்வர் ஒன்று, பல நிறுவனங்களால், பல தரப்பட்டவர்களால் பயன்படுத்தப்படும்போது, அது Community Cloud என அழைக்கப்படுகிறது. வேறு கோணத்தில் பார்க்கையில், ப்ரைவேட் க்ளவ்ட் பொதுவான ஒன்றாகவும் சேவை தரும் ஒரு அமைப்பாகக் கருதப்படும். 


சேவைகள் என்ற வகையில் இவை மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. தற்போது க்ளவ்ட் சேவைப் பணிகள் பலவாறாக மேற்கொள்ளப்படுவதால், இந்த பிரிவுகளும் பல வகைகளாகக் காட்டப்படுகின்றன. அவை,

1. அடிப்படைக் கட்டமைப்பு சேவை (Infrastructure- as -a -Service (IaaS): ஒரு க்ளவ்ட் சேவையில் சர்வர் ஹார்ட்வேர், நெட்வொர்க்கிங் அலைவரிசை அல்லது லோட் பேலன்சிங் போன்ற சேவைகள் வழங்கப்படுகையில், அது அடிப்படைக் கட்டமைப்பு சேவை என அழைக்கப்படுகிறது. அமேஸான் நிறுவனம் வழங்கும் இணைய தள சேவை இதற்கான ஓர் எடுத்துக் காட்டு.


2. சாப்ட்வேர் கட்டமைப்பு சேவை (PaaS = Platform- as -a -Service): ஒரு க்ளவ்ட் சர்வர், அதன் பயனாளர்களுக்கு சாப்ட்வேர் தொகுப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான சூழ்நிலையை, தேவையான மென்பொருட்களைத் தந்தால், அது ஓர் மேடைக் கட்டமைப்பினைத் தருவதற்கு ஒப்பாகும். இதனால், மென்பொருட்களைத் தயார் செய்பவர், அதற்குத் தேவையான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அமைப்புகளை வாங்கி, தங்களது கம்ப்யூட்டர்களில் அமைத்துப் பயன்படுத்த வேண்டியதில்லை. இதற்கான ஓர் எடுத்துக் காட்டு Force.com


3. சாப்ட்வேர் சேவை (Software-as-a-Service (SaaS): அப்ளிகேஷன்கள் மற்றும் புரோகிராம்களைத் தன்னகத்தே கொண்டு, அவற்றைத் தேவைப்படும் பயனாளர்கள் அணுகிப் பெற்றுப் பயன்படுத்தும் சேவையை வழங்கும் க்ளவ்ட் சேவை இந்தப் பிரிவில் வரும். Gmail, Basecamp, and Netflix ஆகியவை இதற்கான எடுத்துக் காட்டுகளாகும்.



க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பணிகளின் எதிர்காலம்: 


மேலே சொல்லப்பட்ட க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வசதிகள் மற்றும் எடுத்துக் காட்டுக்களையும் பார்க்கையில், வரும் எதிர்காலத்தில் இவை இல்லாமல் இயங்க முடியாது என்பது உறுதி. மொபைல் அப்ளிகேஷன்கள், தங்கள் பேக் அப் பைல்களை, க்ளவ்ட் ஸ்டோரேஜில் தான் வைத்துப் பாதுகாக்கின்றன. 


ட்ராப் பாக்ஸ், கூகுள் ட்ரைவ் மற்றும் இது போன்ற க்ளவ்ட் சர்வர்கள் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். அமேஸான், யு ட்யூப் போன்றவை க்ளவ்ட் கட்டமைப்பு சேவைக்கு அடையாளங்களாகும். க்ளவ்ட் இல்லை என்றால், இன்றைக்கு நாம் அனைவரும் 
பயன்படுத்தும் பாதிக்கு மேற்பட்ட இணைய அப்ளிகேஷன்களை இழக்க வேண்டியதிருக்கும். அப்படியானால், இவற்றின் எதிர்காலப் பணிகளும், அவற்றிற்கான இடங்களும் எப்படி இருக்கும்?



இதில் உள்ள அபாயம் என்ன? க்ளவ்ட் ஸ்டோரேஜ் பயனாளர் அனைவருக்கும், அதில் அவர்கள் சேவ் செய்துள்ள டேட்டாவிற்கு அணுக்கத்தினைத் தருகிறது. பயனாளர்களின் கம்ப்யூட்டர்களின் இயக்கம் முடங்கிப் போனாலும், வேறு கம்ப்யூட்டர்கள் அல்லது பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் இருந்து கூட இவற்றை இயக்கலாம். ஆனால், நாம் க்ளவ்ட் ஸ்டோரேஜ் சேவையைத் தரும் நிறுவனத்தை நம்பி, அனைத்து டேட்டாக்களையும் தருகிறோம். இது என்றைக்கும் அபாயம் தான் என்று பலரும் கருதுகின்றனர். இந்த அச்சத்தைப் போக்கும் வகையில், க்ளவ்ட் சர்வர்கள் புதிய தொழில் நுட்பத்தினை உருவாக்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையைப் பின்பற்றுவார்கள்.



அனைத்துமே இணையமாய்:


 இனி வருங்காலம், நமக்கு அனைத்துமே இணையம் தான் என்ற சூழ்நிலையை உருவாக்கும்.  நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும், கம்ப்யூட்டர் மட்டுமின்றி, டி.வி., மியூசிக் பாக்ஸ், மைக்ரோ ஓவன் அடுப்பு, ஏ.சி. மின் சாதனங்கள் என அனைத்தும் க்ளவ்ட் சர்வர்களுடன் இணைக்கப்பட்டு, நாம் எங்கு சென்றாலும், அவற்றை இயக்கும் வகையிலான ஒரு சூழ்நிலை கிடைத்தால் எப்படி இருக்கும்? எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


க்ளவ்ட் சர்வர்கள் நம்மைச் சுற்றி அமைக்கப்பட்டு, அவற்றிலிருந்து நாம் சேவைகளை மேற்கொள்வோம். இன்றைய தொலைபேசி இணைப்பகங்களைப் போல, நம் அருகிலேயே அவை அமைக்கப்படலாம். அதன் மூலம் நம் செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகலாம். வாழ்க்கை தரம் உயரலாம்.