Pages

Monday, September 30, 2013

ஆச்சரியப்படும் உண்மைகள்....

1. குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான்.

2.டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.

3.சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன்.

4.ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.

5. 99 சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் பொழுது ஒரு எழுத்து தப்பாக டைப் செய்துவிட்டால் பாஸ்வேர்டை முழுவதுமாக அழித்து புதிதாக டைப் செய்கின்றனர்.

6.ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின்ஆய்வின் படி ஒரு நபர் காதலில் விழும் பொழுது தனது இரண்டு நெருங்கிய நண்பரை இழந்துவிடுகிறாராம்.

7.கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன்.

8.வெங்காயம் உரிக்கும் போது ச்சீவிங் கம் சாப்பிட்டால் அழுகை வராதாம்,...

Wednesday, September 18, 2013

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி....????


இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்
( http://uidai.gov.in/...dhaar-data.html)


சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளைஅப்லோட் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.

ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்குதேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.


Wednesday, September 11, 2013

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!


மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!
வீட்டு இணைப்புகளுக்கானது:-

முதல் நிலை:-
...
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)
—————————————

இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
——————————-
மூன்றாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.

நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு
3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00
ஆகமொத்தம் ரூபாய் 460.00
செலுத்தவேண்டும்.)
————————–

நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00

(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால்

முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300
யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய்
57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00
ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)


Thursday, September 5, 2013

ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை

ஆசிரியர் தின கவிதை  


உலகம் என்னும் புத்தகத்தில்

சுய அறிவு கொண்டு நாம் நடக்க

எழுத்தை நமக்கு கற்று தந்து

எழுத பழக சொல்லி கொடுத்து

அனுபவம்தான் வாழ்கை என்று

அடிமனதில் பதித்து விட்டு

இன்முகத்துடன் நம்மை

மேல் அறிவு பெற அனுப்பி விட்டு

அதே இடத்தில நின்று

அடுத்த தலைமுறை வளர

ஆயுள் முழுதும் உழைக்கும் ஆசானே

உன்னை வணங்குவதில்

பெருமை கொள்கிறேன்.


ஆசிரியர் தின சிறப்பு கவிதை
எழு பிறப்பையும் 
          ஏற்றம் பெற்றதாய் 
உழலும் நெஞ்சை 
          உறுதி உள்ளதாய் 
தழைக்கும் எண்ணம் 
          தனிச் சிறப்பாய் 
உழைக்கும் எண்ணத்தை 
          உள்ளத்தில் ஊட்டலாய் 
இழைந்த மனமாய்
என்றும் உள்ளதாய் - எம் உள்ளத்திற்கும் 
நுழைந்த கடவுளே..!
நும் வழி காட்டலால் 
பிழைத்தேன் உலகில்
பரவச ஆனந்தத்தில் 
திளைத்தேன் மனதினில் 

கற்ற கல்வியை 
கருத்துடன் நல்கச்செய்தாய் 
பெற்ற அறிவை 
பேணி வளர்க்க செய்தாய் 
நிற்றல் என்பதை
நினைவில் பதித்தாய் (வாழ்வில்)
நற்செயல் அனைத்தையும்
நலமுறக் கற்ப்பித்தாய் - உன்னால் 

வாழ்வைக் கற்றேன்
வளம்பல பெற்றேன் 
ஊழ்வினை தந்த உன்னை
உலகம் உள்ளவரை
போற்றும் என் உள்ளம் - நன்றி
சாற்றும் என் உள்ளம்.