ஆசிரியர் தின கவிதை
உலகம் என்னும் புத்தகத்தில்
சுய அறிவு கொண்டு நாம் நடக்க
எழுத்தை நமக்கு கற்று தந்து
எழுத பழக சொல்லி கொடுத்து
அனுபவம்தான் வாழ்கை என்று
அடிமனதில் பதித்து விட்டு
இன்முகத்துடன் நம்மை
மேல் அறிவு பெற அனுப்பி விட்டு
அதே இடத்தில நின்று
அடுத்த தலைமுறை வளர
ஆயுள் முழுதும் உழைக்கும் ஆசானே
உன்னை வணங்குவதில்
பெருமை கொள்கிறேன்.
ஆசிரியர் தின சிறப்பு கவிதை
எழு பிறப்பையும்
ஏற்றம் பெற்றதாய்
உழலும் நெஞ்சை
உறுதி உள்ளதாய்
தழைக்கும் எண்ணம்
தனிச் சிறப்பாய்
உழைக்கும் எண்ணத்தை
உள்ளத்தில் ஊட்டலாய்
இழைந்த மனமாய்
என்றும் உள்ளதாய் - எம் உள்ளத்திற்கும்
நுழைந்த கடவுளே..!
நும் வழி காட்டலால்
பிழைத்தேன் உலகில்
பரவச ஆனந்தத்தில்
திளைத்தேன் மனதினில்
கற்ற கல்வியை
கருத்துடன் நல்கச்செய்தாய்
பெற்ற அறிவை
பேணி வளர்க்க செய்தாய்
நிற்றல் என்பதை
நினைவில் பதித்தாய் (வாழ்வில்)
நற்செயல் அனைத்தையும்
நலமுறக் கற்ப்பித்தாய் - உன்னால்
வாழ்வைக் கற்றேன்
வளம்பல பெற்றேன்
ஊழ்வினை தந்த உன்னை
உலகம் உள்ளவரை
போற்றும் என் உள்ளம் - நன்றி
சாற்றும் என் உள்ளம்.
No comments:
Post a Comment