Pages

Thursday, October 3, 2013

இணையத்தினை வடிவமைத்துத் தந்த வல்லுநர்கள் சிலர்...

இன்றைய காலத்தின் கணக்கெடுப்பின்படி இணையம் இல்லாமல் எத்தனை சதவிகித மக்களால் இருக்க முடியும் என்று கேட்டால் 100 க்கு 80 சதவித பேர் இருக்க முடியாது என்று தான் கூறுவர்.

மேலும், நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், சாப்பிடும் உணவு போல இணையம், இன்றைய உலகையும் நம்மையும் கட்டிப் போட்டுள்ளது. இணையம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்க்க இயலவில்லை.

நம் வாழ்க்கை விரக்தியின் எல்லைக்கே சென்று விடும். இணையம் நமக்கு தகவல்களைத் தருகிறது; நாம் வாழும் சமூகத்தை நம்முடன் இணைக்கிறது. வர்த்தகத்தையும், நம் அன்றாடப் பணிகளையும் மேற்கொள்ள அடிப்படைக் கட்ட மைப்பாய் இயங்குகிறது.

நாம் மகிழ்வாக இருக்க, பொழுதினைப் பொறுப்போடும், ரசிப்புத் தன்மையுடனும் கழிக்கத் தேவையானவற்றைத் தருகிறது. இப்படி இன்னும் இந்த பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம்.

இது போல இணையத்தினை வடிவமைத்துத் தந்ததன் பின்னணியில் பல்லாயிரக் கணக்கானவர்கள் இருக்கலாம். இருப்பினும், தலைமைப் பொறுப்பில் இருந்து இந்த மாற்றங்களை அவ்வப்போது கொண்டு வந்தது சிலரே. அவர்களை இங்கு காணலாம். கீழே உள்ள படங்களில் அவர்கள் உள்ளனர்...!!!


டிம் பெர்னர்ஸ் லீ :
Posted Image

World Wide Web (WWW) என்னும் கட்டமைப்பை உருவாக்கியவர்.


விண்ட் செர்ப் மற்றும் பாப் கான் :
Posted Image
விண்ட் செர்ப் மற்றும் பாப் கான் இணையத்தின் தந்தையர்கள் என்று அழைக்கப்படுபவர்கள். இவர்கள் தான் இணையத்தினை முதன்முதலில் வடிவமைத்தவர்கள். அமெரிக்காவில் இயங்கிய பொறியாளர்கள். கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள். இணையத்தின் கட்டமைப்பான Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP), என்பதனை வடிவமைத்தவர்கள்.


லினஸ் டோர்வால்ட்ஸ் :
Posted Image

லினஸ் டோர்வால்ட்ஸ் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அமெரிக்க சாப்ட்வேர் பொறியாளர். லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கட்டமைப்பிற்கு அடிப்படையை அமைத்தவர். 1991ல் இதனை வெளியிட்ட பின்னர், பல லட்சக் கணக்கானவர்கள் இன்று வரை இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். பலரால் இது மேம்பாடு அடைந்துள்ளது.



ராஸ்மஸ் லெர்டோர்ப் :

Posted Image
ராஸ்மஸ் லெர்டோர்ப் டேனிஷ் நாட்டைச் சேர்ந்த கனடா நாட்டுக் குடிமகன். பொறியாளர். இன்று இணைய தளங்களில் பயன்படும் PHP ஸ்கிரிப்டிங் மொழியை அதன் வேரிலிருந்து அமைத்துக் கொடுத்தவர்.

ரா தாமஸ் பீல்டிங் :
Posted Image
ரா தாமஸ் பீல்டிங் அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானி. HTTP என்பதனை வரையறுத்து வடிவமைத்துத் தந்தவர். கம்ப்யூட்டர் நெட்வொர்க் ஆர்க்கிடெக்சர் என்னும் பிரிவில் ஒரு தலைமை விஞ்ஞானி.

ஹக்கான் வியூம் லீ :
Posted Image
ஹக்கான் வியூம் லீ ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை விஞ்ஞானி. இணைய பொறியாளர்களில் முன்னணியில் செயலாற்றியவர். Cascading Style Sheets (CSS) என்ற கோட்பாடினைக் கொண்டு வந்து செயல்படுத்தியவர்.

ரே டாம்லின்ஸன் :
Posted Image
ரே டாம்லின்ஸன் மின் அஞ்சலின் தந்தை எனப் போற்றப்படுபவர். 1971ல் ARPANET கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில், முதன் முதலில் மின் அஞ்சலை இயக்கிக் காட்டியவர்.


ராபர்ட் டப்பான் மோரிஸ் :
Posted Image
ராபர்ட் டப்பான் மோரிஸ் இணையத்தில் முதல் வைரஸ் என அழைக்கப்படும் மோரிஸ் வோர்ம் என்ற வைரஸை உருவாக்கியவர். இது 1988ல் நடந்தது. கம்ப்யூட்டர் மோசடி மற்றும் தீய நோக்கத்திற்காகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிரான சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட முதல் நபர்.


டாம் ஆண்டர்சன் :
Posted Image

டாம் ஆண்டர்சன் முதல் சோஷியல் இணைய தளமான மை ஸ்பேஸ் என்பதனை உருவாக்கியவர். 2003ல் இது உருவாக்கப்பட்டது.



ஜிம்மி வேல்ஸ் :

Posted Image
ஜிம்மி வேல்ஸ் விக்கிபீடியா தளத்தினை உருவாக்கியவர். இந்த கட்டற்ற இணைய வெளி கலைக் களஞ்சியத்தை, 2001 ஆம் ஆண்டு ஜனவரி 15ல், இவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இப்போதும் இது தொடர்ந்து வளர்ந்து வருகிறது.


ஷான் பேனிங் :
Posted Image
ஷான் பேனிங் பைல்களைப் பகிர்ந்து கொள்ளும் நேப்ஸ்டர் என்னும் கட்டமைப்பினை வரையறை செய்து 1998ல் வழங்கியவர்.


பிராம் ஹோஹன் :
Posted Image
பிராம் ஹோஹன் P2P பிட் டாரண்ட் பைல் ஷேரிங் அமைப்பினை உருவாக்கித் தந்தவர்.


ஜெப் பெஸோஸ் :
Posted Image

ஜெப் பெஸோஸ் அமேசான் டாட் காம் என்னும் உலகின் பிரபலமான இணைய வர்த்தக தளத்தினை உருவாக்கியவர். இணைய வழி வர்த்தகத்தின் மாடல் இயக்கமாக இன்றும் பின்பற்றப்படும் வர்த்தக இணைய தளம்.



மார்க் ஸுக்கர் பெர்க் :
Posted Image
மார்க் ஸுக்கர் பெர்க் Mark Elliot Zuckerberg என்ற பெயர் கொண்ட இவர், பேஸ்புக் இணைய தளத்தை வடிவமைத்த ஐந்து பொறியாளர்களில் தலைமையானவர். பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி.


லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் :
Posted Image
லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் உலகின் மிகப் பெரிய தேடுதல் தளமான கூகுள் டாட் காம் உருவாக்கிய கம்ப்யூட்டர் மற்றும் இணைய வல்லுநர்கள். பின்னர், கூகுள் நிறுவனம் பல பிரிவுகளைத் தொடங்கி இணையத்தைத் தன் வசப்படுத்தி வருகிறது.

No comments:

Post a Comment